போதி தர்மர் பிறந்த மண்ணில் இந்தியா சீனா பேச்சுவார்த்தை! டாக்டர் ராமதாஸ் பெருமிதம்!  - Seithipunal
Seithipunal


தமிழத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கின்ற, வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்-பிங் இடையிலான பேச்சுவார்த்தை வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  

இருநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை, அக்டோபர் மாதம் 11,12,13 ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

இந்த பேச்சுவார்த்தையின் போது, இரண்டு தலைவர்களும் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்திலுள்ள பல இடங்களை பார்வையிட இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிகழ்வு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பெருமிதத்துடன் ட்விட் ஒன்றினை போட்டுள்ளார். அதில், "சீன அதிபர் ஜி பிங், இந்தியப் பிரதமர் மோடி இடையிலான பேச்சு மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-13 தேதிகளில் நடைபெறுகிறது: மத்திய அரசு - பல்லவ மன்னர்கள் ஆண்ட மண்னில், சீனாவில் வணங்கப்பட்ட போதி தர்மர் பிறந்த மண்ணில் இந்த பேச்சுக்கள் நடப்பது நமக்கு பெருமை தானே!" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss happy for indo china meeting in mamallapuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->