திமுகவிற்கு வாக்களித்தால் சுடுகாடாக மாறும் மயிலாடுதுறை தொகுதி - மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஹைட்ரோ கார்பன் திட்டம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் மூலமாக கொண்டு வரப்பட்டது. காவேரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க முழுமுதற் காரணம் பாமக தான் என மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மயிலாடுதுறை பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையில், " அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்கையில் 10 அம்ச கோரிக்கை வைக்கப்பட்டு கூட்டணிக்கு சென்றோம். அதில் முக்கிய கோரிக்கையாக காவேரி டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றியுள்ளார். 

கடந்த காலங்களில் நாம் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்த மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தை எப்படியாவது ஆட்சி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் மூலமாக கொண்டு வரப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதிமுக விவசாயிகளின் நலனை மதித்து, அவர்களுக்காக போராடும் கட்சி. 

விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் அறிக்கை விடுதல், ஆதரவு தெரிவித்தல், போராட்டம் நடத்துதல் என்று பாமக பல உதவிகளை செய்து வருகிறது. விவசாயிகளின் தோழனாக பாமக இருக்கிறது. அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயி. நானும் விவசாயி. 

நான் சிறுவயதான காலங்களில் ஏர் ஒட்டி விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். விவசாயிகளின் கஷ்டம் எனக்கும், தமிழக முதல்வருக்கும் நன்கு தெரியும். அதனாலேயே பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசயிகளின் கஷ்டத்தை தீர்க்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

திமுகவிற்கு நீங்கள் வாக்களித்தால் மயிலாடுதுறை பகுதி சுடுகாடாக, பாலைவனமாக மாறிவிடும். இதனை தவிர்க்கும் வகையில் வேளாண் மண்டலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இப்பகுதி மக்களையும், எதிர்காலத்தையும் காப்பாற்றியுள்ளோம். அதிமுக கூட்டணி ஏழை, எளிய மக்களுக்கான கூட்டணி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கூட்டணி. 

பாமகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம். மக்கள் வளர்ச்சியடைய பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையை நகலெடுப்பதே திமுகவிற்கு வேலையாகிவிட்டது. நமது தேர்தல் அறிக்கை வளர்ச்சி, மகிழ்ச்சி, தமிழக முன்னேற்றத்தினை ஊக்கப்படுத்துவது. 

அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுதசுரபி. அமுதம் அல்ல அல்ல வந்துகொண்டே இருக்கும் அமுதசுரபியாக அதிமுக தேர்தல் அறிக்கை உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது நிச்சியம். அந்த ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் மயிலாடுதுறை பகுதியை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று தெரிவித்தார்கள். அது சிங்கப்பூராக மாறிவிட்டதா?. 

மயிலாடுதுறைக்கான திட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்றால், நமது வேட்பாளருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். வேலையிலில்லாத மாணவர்களுக்கு மாதம் ரூ.4000 மற்றும் போட்டித்திறன் பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியுள்ளோம். அதிமுக ஆட்சி அமைந்ததும் மயிலாடுதுறையில் சிப்காட் கொண்டு வரப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Election Campaign at Mayiladuthurai About Kavery Delta Produced Place TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->