தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்று, மருத்துவர் இராமதாசு முக்கிய கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த இயலாது என்றும், மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, தனது ட்விட்டர் பக்கத்தில் " தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை  தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss agree Tamilnadu Govt Decision about New Education Policy Changes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->