அன்புமணியின் அன்பான இயற்கைக்கான வேண்டுகோள்.. ஆதரவு தெரிவிக்கும் திரைத்துறை பிரபலங்கள்.!! - Seithipunal
Seithipunal


உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்தியத் தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இனியாவது இயற்கையை நாம் மதிக்காவிட்டால் மனிதகுலத்தை காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும்.

இயற்கை மிகவும் உன்னதமானது. உலகில் உள்ள அனைவரையும் அரவணைக்கக் கூடியது. அதனால் தான் இயற்கையை அன்னை என்று அழைக்கிறோம். ஆனால், நாம் அன்னைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை இயற்கைக்கு கொடுப்பதில்லை. மனிதனின் சுயநலத்திற்காக இயற்கையை காவு கொடுக்க நாம் தயங்குவதில்லை. அதனால், இயற்கை அதன் குணத்திலிருந்து மாறி, பேரிடர்களை வழங்கத் தொடங்கியிருக்கிறது. 

உலக சுற்றுச்சூழல் நாள் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி நாட்டு மக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் காணொலி பதிவை பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவலும் நிதர்சனமான உண்மைகள் ஆகும். பிரச்சனைக்குரிய காரணங்கள் மற்றும் உரிய தீர்வுகள், மக்களின் ஒத்துழைப்பு நடவடிக்கை போன்றவற்றையும் முக்கியமாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகளை பலதரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், நடிகர் சமுத்திரக்கனி, இயக்குனர் சீனு ராமசாமி போன்ற பலரும் தங்களின் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Global Environment day video trending


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->