கதவை மூடவில்லை என்றால் இனி அவ்வுளவுதான்..! இறுதி எச்சரிக்கை வழங்கிய போக்குவரத்து துறை.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து., கதவுகள் மூடப்படாமல் இருப்பதே காரணம் என்றும்., அதை மூடாமல் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர் மற்றும் கண்டக்டருக்கு மெமோ வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு உட்கார இடம் கிடைக்காததால்., படிக்கட்டுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு பயணம் செய்திருக்கிறார்.  

இதை தொடர்ந்து பேருந்து சர்வீஸ் சாலையில் வேகமாக திரும்பியது, அப்போது உள்ளே நின்று கொண்டிருந்த பெண் பேருந்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். மேலும் கிட்டத்தட்ட 100 அடி சாலையில் தேய்த்துக் கொண்டே சென்ற அந்த பெண்., அருகில் இருந்த சாக்கடைக்குள் விழுந்து கடுமையாக காயமடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து., போக்குவரத்து துறை சார்பில் அனைத்து பேருந்துகளிலும் கதவுகள் சரியாக மூட படுகிறதா? என்று திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்படி பேருந்தில் கதவுகளை மூடாமல் பேருந்தை இயக்கினால் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கும் மெமோ வழங்கப்படும் என்று போக்குவரத்து நிர்வாகம் அதிரடி எச்சரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு மற்ற மாநகர பேருந்துகளுக்கு பொருந்தும் என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doors should be closed in all buses


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->