வனவிலங்குகளை இடையூறு செய்யக்கூடாது..பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை..!  - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வந்து செல்கிறது. நேற்று முன்தினம் இரவு கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. 

இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் பயத்துடன் சென்றனர். இந்நிலையில் கூடலூர் ஊசிமலை அருகே உள்ள சாலையோரம் சுமார் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் சுற்றித்திரிந்து, சாலையின் மறுபுறம் செல்ல முயன்றது. ஆனால் தடுப்பு சுவர்கள் உயரமாக இருந்ததால், ராஜநாகத்தால் உடனடியாக அங்கிருந்து செல்ல முடியவில்லை. 

இதனால், ராஜநாகம் பல நேர முயற்சிக்குப் பிறகு சாலையோரத்தில் இருக்கும் புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது. இதனிடையே சாலையோரம் ராஜநாகம் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் பயமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கும்போது, வனவிலங்குகள் சாலையோரம் தென்பட்டால் அதற்கு இடையூறு செய்யக்கூடாது. அது தானாகவே வனத்துக்குள் சென்று விடும் என்று பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dont disturb wild animals forest department warning


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->