இராமேஸ்வரத்தில் துள்ளிக்குதித்து பயணம் செய்த டால்பின்கள்.. வைரலாகும் புகைப்படம்.!! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் கடல் பகுதியில் டால்பின்கள் துள்ளிக்குதித்து விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பாம்பன் முதல் மண்டபம் கடல் பகுதியில் ஏராளமான டால்பின்கள் காணப்படுகிறது. இந்த சூழலில், பாம்பன் இரயில்வே பாலம் அருகேயுள்ள வடக்கு கடல் பகுதியில் டால்பின்கள் துள்ளிக்குதித்துள்ளது. 

இன்று காலை சுமார் 10 மணியளவில் 5 டால்பின்கள் துள்ளியபடி குதித்து விளையாடியது அப்பகுதி வாசிகளால் வெகுவாக ரசிக்கப்பட்டது. மேலும், சிறுது நேரம் விளையாடிக்கொண்டு இருந்த டால்பின்கள், மன்னார் வளைகுடா கடல் பகுதியை நோக்கி பயணம் செய்தது. 

இந்த விஷயம் தொடர்பாக வனத்துறை அதிகாரி தெரிவிக்கையில், பாம்பன் பகுதியியல் டால்பின்கள் பெரும்பாலும் கூட்டமாக காணப்படும் என்றும், இவை தனியாக பெரும்பாலும் உலா வராது என்றும் தெரிவித்தார். 

மேலும், டால்பின்களை பிடிக்கவோ அல்லது வேட்டையாடவோ தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடையை மீறி செயல்பட்டால் 3 வருடம் முதல் 7 வருடம் வரை சிறை தண்டனையும் அனுபவிக்க இயலும் என்றும் கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dolphin enjoy at Rameswaram Pamban Bridge


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->