மருத்துவரின் அஜாக்கிரதையால் துடிதுடிக்கும் பெண்.! பிரசவத்தின் போது கையுறையை வைத்து தைத்த மருத்துவர்!. - Seithipunal
Seithipunalதிருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதிக்கு அருகேயுள்ள, தைக்கால் காலணியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார். 

இவரது மனைவி கார்த்திகா, இவருக்கு ஏற்கனவே முதல் குழந்தை இருந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமடைந்திருந்தார்.

இந்நிலையில் கார்த்திகா  இரண்டாவது பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய கார்த்திகாவிற்கு தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டே  இருந்துள்ளார். 

இதையடுத்து, கார்த்திகாவிற்கு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்பொழுது அவரது வயிற்றுக்குள் கையுறை இருந்தும், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் தவறுதலாக கையுறையை வயிற்றில் வைத்து தைத்ததும் தெரிய வந்தது.

பின்னர், அறுவை சிகிச்சை மூலம் கையுறை அகற்றப்பட்டது. இருப்பினும் கார்த்திகாவின் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில் கார்த்திகாவிற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், கையுறையை வயிற்றில் வைத்து கவனக்குறைவாக தைத்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் ஆனந்தராஜ் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors wrongy surgery to pregnant lady


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal