தமிழகத்தில் மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு!! அதிர்ச்சியில் மக்கள்!! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நான்கு நாட்களுக்கு முன் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள் அங்கிருந்த மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்து இளநிலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இரண்டு நாட்களாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான இளநிலை மருத்துவரின் மருத்துவச் செலவை முழுமையாக ஏற்பதாகவும், மருத்துவ சேவைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவர்களும் பணிக்கு திரும்புங்கள் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவர்களுக்கு நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில்,  இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 'கொல்கத்தா எஸ்.எஸ்.கே.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,  2 பயிற்சி மருத்துவர்கள், கொடூரமாக தாக்கப்பட்டது, மருத்துவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. 

மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, நாளை அதாவது 17-ந்தேதி காலை 6 மணி முதல் 18 ஆம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரம், தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தங்களது மருத்துவ சேவைகளை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், மக்கள் நலன் கருதி, அத்தியாவசிய அவசர மருத்துவ சேவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், மருத்துவர்கள், நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொல்கத்தா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 2 பயிற்சி மருத்துவர்கள், கொடூரமாக தாக்கப்பட்டது, அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக, சுட்டிக் காட்டியுள்ளனர். இதை கண்டித்து, நாளை 17-ந்தேதி காலை 6 மணி முதல் 18-ம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரம், தமிழகம் முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், மக்கள் நலன் கருதி, அத்தியாவசிய மருத்துவ சேவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors strike announcement in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->