தமிழகத்தில் கருப்பு நிற உடை அணியப்போகும் மருத்துவர்கள்.. காரணம் இதுதான்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவமனையை சார்ந்த 55 வயது மருத்துவர், கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி வானகரம் பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சமயத்தில், இவரின் உடல்நலம் சமீபத்தில் மிகவும் மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு மற்றும் டயாலிசிஸ் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸின் அறிகுறியும் தென்பட்டு, உடல்நிலை மிகவும் மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய அங்குள்ள அண்ணாநகர் பகுதியில் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 இந்நிலையில், அரசு மருத்துவர்கள் நாளைமுதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும். பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு இன்று இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் மெழுகு வர்த்து ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors in black dress in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->