மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 42 பேர் வெளியே செல்ல தடை.! வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்றுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,885 ஆக இருந்தது. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியான நபர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. 1,020 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியிருந்தனர்.

நேற்று மட்டும் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1101 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கலில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 42 பேர் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை வீட்டை விட்டு வெளியே வர கூடாது என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலகிருஷ்ணாபுரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம் 42 பேர் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக வெளியே செல்லும் போது நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors are forbidden to go out in dindigul


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->