மருத்துவமனையின் கழிப்பறையில் பிணமாக கிடந்த மருத்துவர், விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சுதர்சன். 24 வயது நிறைந்த இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த சுதர்சன்,கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே திரும்பி வரவில்லை. 

இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் துப்புரவு பணியாளர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்றபோது, அங்கு சுதர்சன் மயங்கி கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தம் போட்டுள்ளனர். பின்னர் அவரது சத்தம் கேட்டு அங்கு விரைந்த மருத்துவமனையில் பணியாற்றிய நர்சுகள் மற்றும் டாக்டர்கள் சுதர்சனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.                                                                                                             

மேலும் கழிவறை பேசினுக்கள் ஒரு சிரிஞ்ச் கிடந்துள்ளது. அதுமட்டுமின்றி அதன் அருகில், கேட்டமைன் என்ற போதை பொருள் பாட்டிலும் கிடந்துள்ளது. பின்னர் இதன்குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டநிலையில், அங்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் விசாரணையில் சுதர்சனுக்கு அடிக்கடி போதை ஊசி மற்றும் மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்ததும்,அதனை அவரது பெற்றோர் கண்டித்ததும் தெரியவந்தது. மேலும் இதனால், மன உளைச்சல் அடைந்த அவர், கேட்டமைன் என்ற போதை பொருளை அதிகளவில் செலுத்தி தற்கொலை செய்துள்ளார்  இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

English Summary

doctor cpmits suicide hospital toilet


கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
Seithipunal