என்னை பார்த்தாவது திருந்துங்கள் நண்பர்களே.. வைரலாகும் உருக்கமான பதிவு.! அரக்கனை வென்றெடுத்த நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள இளந்தலைமுறை முதல் முந்தையை தலைமுறை வரையுள்ளவர்களில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாத நபர்கள் இருந்தால் விரலை விட்டு எண்ணிவிடலாம் என்ற சூழலே இருந்து வருகிறது. போதை என்ற விஷயத்தை நன்மை என்று எண்ணிக்கொண்டு இருக்கும் பலருக்கும், மதுவால் ஏற்படும் வாழ்வியல் பிரச்சனை மற்றும் உடல்நல பிரச்சனை குறித்து தெரிந்தாலும், தெரியாமல் இருந்தாலும் மது என்ற அரக்கனை கைவிட மறுத்து இருந்து வருவது தான் இன்றைய வாழ்வியலின் சாபக்கேடாக இருந்து வருகிறது. 

" மது நாட்டிற்கு வீட்டிற்கு கேடு.. குடி குடியை கெடுக்கும்.. குடிப்பழக்கம் குடும்பத்தை கெடுக்கும் " என்று என்ற வாசகங்களை நமது வாழ்க்கையின் பல இடங்களில் கண்டிருப்போம். ஆனாலும், மனம் மதுவை தேடும் மனப்பாங்கு இன்று இருக்கிறது. இதில், உலகமகா குடிகாரன் எல்லாம் சரிவர உணவை கூட சாப்பிடாமல் எந்த நேரமும் முழு போதையில் சுற்றித்திரிந்த வண்ணம் இன்றளவும் இருக்கின்றனர். மது என்ற போதையால் மதியிழந்து அரங்கேறும் குற்றங்களும் இன்றளவு ஏராளம் இருக்கிறது. 

குடும்ப வறுமையில் பிள்ளைகள் ஒருவேளை உணவில்லாமல் ரேஷன் அரிசியை சாப்பிட்டு, தண்ணீர் குடித்து தாயுடன் கண்ணீருடன் பல மாதங்கள் வாழ்ந்த கதையும், மதியால் மதியிழந்த தந்தை பைத்தியக்காரன் என்ற நிலையில் இருந்து, தன்னை பிடிக்க வருகிறார்கள் என்று வெளியே செல்ல, யாரும் வரவில்லை என்று தாயும், மகனுமாக தந்தையுடன் நடத்திய பாச போராட்டம் என மதுவால் அரங்கேறிய கொடூரங்கள் பல... இன்றுள்ள பிள்ளைகளுக்கு பெற்றோர்களில் தந்தையை கண்டாலே வெறுப்பு.. மது அருந்தும் தந்தையால் குடும்பத்தில் அரங்கேறிய சோகங்கள் தந்தையின் மீது இனம்புரியாத வெறுப்பை தெரிந்தோ தெரியாமலோ விதைத்துவிடுகிறது எனது தந்தைகளுக்கு காலம் கடந்த பின்னர் தான் புரிகிறது.

எங்கு என்ன நடந்தாலும் மது என்ற அரக்கனால் நடைபெறும் குற்றங்கள் தனிநபரின் குடும்பத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பது நம்மில் பலரால் வாழ்வியலில் உணரப்பட்டது. அந்த வகையில், முகநூலில் தனது வாழ்க்கையை பாடமாக எண்ணி, இளந்தலைமுறை மற்றும் யாராக இருந்தாலும் மதுபழக்கத்தை விட வேண்டும் என்ற முகநூல் பதிவு வைரலாகி வருகிறது. இது குறித்த பதிவில், மதுவால் அவர் அடைந்த துன்பங்கள் மற்றும் துயரங்கள் என அனைத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார். 

இது குறித்த முகநூல் பதிவில், " கொஞ்சம் பொருமையாக படியுங்கள் நண்பர்களே. 21.01.2020 ஒரு வருடத்திற்கு முன் இந்த நாள் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்த நாள். பாழாய் போன சனியன் குடியை விட்டு ஒரு வருடம் இன்றோடு ஆகிறது. 21.01.2020 அந்த நாளை நினைத்து பார்க்கிறேன் ஒரு கனம். சென்னை புத்தக_கண்காட்சிக்கு போவதற்காக காலையிலே பஸ் ஏறி.

சென்னை கிளம்பினேன். பஸ்ஸில்  உட்காரும் போதே தலை சுற்றுகிறது. கண் இரண்டாக தெரிகின்றது. சரி படுத்து தூங்கி கொண்டே போனா சென்னை போறதுக்கு உள்ள சரியாகி விடும் னு படுத்து விட்டேன். பெருங்களத்தூர் போகும் போது என்னால் முடியவில்லை. பஸ் இறங்கி டாக்டரை பார்த்து விட்டு பிறகு போகலாம் என்று இறங்கி விட்டேன். ஆஸ்பத்திரிக்கு போக முடியவில்லை.மயக்கமா வருகிறது. எப்படியோ போய் விட்டேன்.

இரத்த அழுத்தம் செக் பன்னாங்க(B.P).. 180 இருக்கின்றது. சார் நீங்க உடனே சென்னை சென்ட்ரல் ஆஸ்பிட்டல் போங்க. இங்க எங்க கிட்ட போதிய வசதிகள் இல்லை. நீங்க அங்க போகறது தான் சரினு சொல்லிடாங்க. 108 ஆம்புலென்ஸ் அவ்வளவு தூரம் போகாது னு சொல்லி குரோம்பேட்டையில் G.H ஆஸ்பத்திரியிலேயே விட்டு விடுவிட்டார்கள். அங்கேயும் சிகிச்சை பார்க்க மாட்டேங்கிறாங்க. யாருக்காவது போன் பன்னி வரசொல்லுங்க.

நீங்க சென்னை சென்ட்ரல் (G.H)போனாதான் உங்களுக்கு முறையான சிகிச்சை கொடுப்பாங்க னு சொல்லிடாங்க. யாருக்கு போன் போடுவது ஒன்னும் புரியவில்லை. நண்பன் வடிவேலுக்கு போன் போடலாம் னு தொனுச்சு ஏன் னா. அவன்தான் குரோம்பேட்டை பக்கத்தில் இருக்கிறா. அவனுக்கு போன் பன்னா எடுக்க மாட்டேங்கிறா. ஏன்னா சின்ன சின்ன மனஸ்தாபங்கள் (குறிப்பா அவ போன் பன்னா நான் எடுக்கறது இல்லை.) சரி விடாமல் போடுவோம் கட்டாயம் எடுப்பான் ஏன்னா #உயிர்_காப்பான்_தோழன்_இல்லை யா...?

போனை எடுத்தா. சொல்லு டா பொரிக்கி பையா னா. வடிவேலு நான் குரோம்பேட்டையில் இருக்கிறேன். வரமுடியுமா என்று கேட்டு விசயத்தை சொன்னேன். அவ பொங்கல் கொண்டாட ஊருக்கு போய். இப்போது தான் சென்னை வந்து கொண்டு இருக்கிறேன். நீ கவலைப்படாதே நான் எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமே. வந்து விடுகிறேன் னு சொல்லி விட்டு போனை கட் பன்னி விட்டான். சாயங்காலம் 6 மணிவரை. பச்ச தண்ணி கொடுக்க ஆள் இல்லை.

துணைக்கு யாரும் இல்லாமல் நரகவேதனை. B.P வேற தலமட்டத்திற்கு ஏறி விட்டது. ஒரு வழியாக 6:30 மணிக்கு வடிவேலு தன் காரை எடுத்து கொண்டு வந்து விட்டான். உடனே சென்னை சென்ட்ரல் ஆஸ்பிட்டல் இரவு 9 மணிக்கு போய் அட்மிட் ஆகிவிட்டேன். பிறகு அண்ணன் A.K மூர்த்தி.Ex.M.P. அண்ணன், அ.கணேஷ்குமார். Ex.MLA அவர்கள் இருவரும். மருத்துவர் நல்லி யுவராஜ் அவரிடம் போனில் தொடர்பு கொண்டு எனக்கு தீவிர சிகிச்சை கொடுக்க அறிவுறுத்தினார்கள். (அண்ணன்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றி) 

சில மன உளைச்சல். பொங்கலில் இருந்து தொடர்ந்து. குடி குடினு குடித்ததால்.இந்த நிலமை. பிறகு 8 நாட்கள் கழித்து குணமடைத்து வீடு திரும்பினேன். இதற்கு இடையில் எனக்கு வேண்டாதவர்கள். சில சொந்த பந்தங்கள் என்னென்ன ஏலன பேச்சு. ரகுபதி அவ்வளவு தான். கைகால் வெலங்க வில்லையா. மூக்கால தான் தண்ணி சாப்பாடு போகுதா. செஞ்சபாவம் சும்மா விடுமா... எவ்வளவு தூத்த முடியுமோ அவ்வளவு தூத்தனாங்க.

கண் பார்வை சரியாக தெரியவில்லை. பிறகு சரியாகி விட்டது. (எங்க வீட்டு செல்லம் கவிராஜ்க்கு நன்றிகள் பல) இரண்டு வாரம். வலது கை லேசாக வலு இழந்தது. இடது கால் மறத்து போய் விட்டது. எல்லாம் மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டால் சரியாகி விடும் என்றார் மருத்துவர். இப்போதும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன். இப்போது சில நண்பர்கள் குடிக்க கூப்பிடால். இந்த போட்டோவை காட்டுவே அவுங்கலே விட்டு விடுவார்கள்.

என் அப்பா. அம்மா. அக்கா. மாமா. அண்ணன். தம்பி. என் நல்ல நண்பர்கள் செய்த புண்ணியத்தால். வேண்டுதளால். கடவுள் அருளால்  மீண்டு வந்தேன். சீ... நீ எல்லாம் ஒரு ஆளு. இதை எல்லாம் ஒரு பதிவுனு. முகநூலில் பதிவிட்டு இருக்கனு சிலர் நினைங்கலாம் சிலர் பட்டு திருந்துவாங்க. சிலர் பார்த்து திருந்துவாங்க. என்னை பார்த்து ஒரு சிலர் திருத்தினால் மனம் மகிழ்ச்சி அடைவேன். அவ்வளவே. 

எங்கள் ஊரில் கடந்த ஆண்டு. இரண்டு நண்பர்கள். மச்சான் சிவமுருகன் தேமுதிக. மச்சான் பைட்டோ அய்யனார் பா.ம.க அவர்கள் இறப்பிற்கு குடியும் ஒரு காரணம். எங்கள் நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் அது. மருத்துவர் அய்யா ஒரு தீர்க்கதரிசி அதனால் தான் இந்த பாழாபோன மது வேண்டாம் என்று போராடிகொண்டு இருக்கிறார். நண்பர்களே தயவு செய்து. மது பழக்கத்தை விட்டு ஒழியுங்கள் " என்று தெரிவித்துள்ளார். 

என்றுமே ஒரு சில விஷயங்களில் அடுத்தவரின் அனுபவம், அவரின் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை தெரிந்த நாம், அவரது முற்காலம் போல இருக்க கூடாது. புரிக்கு வகையில் கூற வேண்டும் என்றால், அடுத்தவரின் அனுபவத்தில் திருந்தி சுதாரித்து செயல்படுதலே நல்லது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do not Drink Alcohol humble request of an experienced person in Facebook Ragupathy Parthasarathi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->