மாமியார் உடைத்தால் மண் குடம்., மருமகள் உடைத்தால் பொன் குடமா? - டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் காமெடி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் மதுபான கடைகளை திறக்க திமுக தலைமையிலான தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர் என யாரிடம் மதுபான காடைகள் திறப்பு தொடர்பான விளக்கம் கேட்டாலும், கொரோனா குறைந்துள்ள இடங்களில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளில் இதுவும் ஒன்று என்பதை போல் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், 

மதுபானக்கடைகள் விவகாரத்தில் பல தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதன்போது பதிலளித்த அமைச்சர் கே.என் நேரு, " பாஜக ஆளும் மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்கும் போது எழுப்பாத கேள்வி, ஏன் இங்கு எழுப்பப்படுகிறது?. மாமியார் உடைத்தால் மண் குடம்., மருமகள் உடைத்தால் பொன் குடமா? " என்று கேள்வி எழுப்பி சென்றார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK TN Minister Comedy Troll about TASMAC Open BJP Status


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->