கீழடி ஆராய்ச்சியை நேரில் கண்ட முக.ஸ்டாலின் அசத்தல் பேச்சு.! கொண்டாட்டத்தில் உடன்பிறப்புகள்.!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் கீழடியில் செய்யப்பட்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான அதிசயங்களும், பிரமிக்கவைக்கும் வரலாறும் வெளிப்பட்டு வருகிறது. இது தமிழர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

உலகிலேயே சிந்து சமவெளி நாகரீகத்தை விட மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகம் அடையாளம் கண்டறியப்பட்டது. சுமார் 2,600 வருடங்களுக்கு முன்பே தமிழர்களின் கலாச்சாரம், எழுத்தறிவு போன்றவற்றில் சிறந்து விளங்கினார் என்பதை விளக்கும் ஆதாரங்கள் தற்போது கிடைத்ததை தொடர்ந்து ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும், மகிழ்ச்சியில் ஆதரித்து வருகின்றது.

இந்த நிலையில்., தற்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியின் 5 ஆம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியை பல அரசியல் கட்சி பிரமுகர்களும்., பொதுமக்களும் நேரில் வந்து கண்டு செல்லும் நிலையில்., தற்போது இந்த அகழ்வாராய்ச்சியை திமுக தலைவர் முக.ஸ்டாலினும் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

kelladi, கீழடி, கீழடி அகழ்வாராய்ச்சி,

கீழடிக்கு நேரில் சென்ற முக.ஸ்டாலின் அகழ்வாராய்ச்சியை கண்டுவிட்டு., அங்குள்ள ஆராய்ச்சியாளர்களிடம் சென்று விபரங்களை கேட்டறிந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இந்த பேட்டியில்., இந்தியாவுடைய வரலாறு மேற்கில் இருந்து துவங்க வேண்டும் என்று கூறி., பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். 

ஆனால்., அதற்கு மாறாக இந்தியாவுடைய வரலாறு கீழடியில் இருந்து துவங்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையிலேயே., கீழடி அகழ்வாராய்ச்சியானது உறுதி செய்துள்ளது. தமிழரின் பண்பாடு., கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் என்றும் திமுக உறுதியாக இருக்கும். தமிழரின் கலாச்சாரத்தை மத்திய அரசானது கட்டாயம் பாதுகாக்க வேண்டும். தமிழரின் கலாச்சாரத்தை பாதுகாக்க தமிழக அரசு., மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தை தர வேண்டும் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk stain visit keeladi excavation and says save tamilan culture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->