நடிப்பு சொல்லிக்கொடுத்தும் அக்காவுக்கு வரலை.. திமுக பிரச்சாரத்தில் கலகலப்பூ...! ராஜதந்திரம் டோட்டல் வேஸ்ட்..!! - Seithipunal
Seithipunal


விறகு அடுப்பில் தினமும் சமைத்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் சென்று, கியாஸ் விலை உயர்வால் விறகில் சமைத்து கொண்டிருப்பதாக நடிக்கவைத்த திமுகவினரின் ராஜதந்திரம் டேக் வாங்கியும் பலிக்காத சோகம் அரங்கேறியுள்ளது. 

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக மருத்துவர் முத்துராஜா களமிறங்கியுள்ளார். இவர் திருவப்பூர் பகுதிகள் கூட்டணிக் கட்சியினருடன் வாக்குகளை சேகரித்து வந்து கொண்டிருந்தார். 

அதன்போது ஒரு வீட்டில் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு வெளியே விறகு அடுப்பில் பெண்மணி சமைத்துக் கொண்டிருந்தனர். இதனைக்கண்ட வேட்பாளர் முத்துராஜா, கையில் அடுப்பூதும் குழலை எடுத்து ஊத, அவரது ஆதரவாளர்கள் சமையல் கேஸ் விலை உயர்வால் மீண்டும் பழையபடி விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருப்பதாக நடிக்க சொல்லினர். 

முதலில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு சரிவராததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது டேக் கொடுத்தும் அந்த பெண்மணிக்கு நடிப்பு வரவில்லை. இதனையடுத்து பெண்மணிக்கு பதிலாக வேட்பாளர் டப்பிங் பணிகளை மேற்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Pudukkottai candidate Drama Acting Waste TN Election 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->