உள்ளூருக்குள் ஒன்றிணைவோம் வா... ஆந்திராவிற்கு அரிசி கடத்தல்.. திமுக செயலாளர் கைது.!! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடி பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்றதாக திமுக கிளைச் செயலாளர் மற்றும் ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த தமிழக - ஆந்திர எல்லை பகுதியான பாரதி நகர் பகுதியில் அம்பலூர் காவல் நிலைய அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.. 

இந்த சமயத்தில், அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி காவல்துறையினர் சோதனை செய்ததில், அந்த மினி வேனில் 4 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில், ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடந்து செல்ல முயன்றது உறுதியாகியுள்ளது. 

இதன் பின்னர் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்த நிலையில், ஓட்டுனர் சங்கர் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த முதற்கட்ட விசாரணையில், மினி வேன் வாணியம்பாடி தும்பேரி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் வேலு என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. 

இதுமட்டுமல்லாது தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில், தமிழக ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு தொடர்ந்து கடத்தப்படுவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், மினி வேன் ஓட்டுனரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில், திமுக கிளைச் செயலாளர் வேலுவும் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Party member arrest by police due to ration rice thief


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->