தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமாரை விரட்டியடித்த பொதுமக்கள்... ஊருக்குள் நுழையவிட மறுப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி நத்தமேடு கிராமத்தில், 1987 வன்னியர்கள் இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிரிழந்த சுப்பிரமணி என்பவருக்கு நினைவு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி அளிக்க போவதாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அவரின் நினைவிடம் வன்னியர் சங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளதால், வன்னியர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவைச் சார்ந்த எம்.பி இங்கு வரக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஆனால், தடையை மீறி திமுக தொண்டர்கள் புடைசூழ, தர்மபுரி எம்.பி நத்தமேடு கிராமத்திற்குள் நுழைய முயற்சிக்கவே, விவரத்தை அறிந்து விரைந்துவந்த பாமகவினர் தர்மபுரி எம்.பி கிராமத்திற்கு நுழைய கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்களை மீறி தர்மபுரி எம்பி ஊருக்குள் செல்ல முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பாமகவினரை தள்ளிவிட்டு மருத்துவர் செந்தில்குமாரை கிராமத்தில் அழைத்துச்செல்ல திமுகவினர் சிலர் முயற்சிக்கவே, இருதரப்பு இடையே கைகலப்பு உருவாகும் சூழல் உண்டானது. இதனையடுத்து பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினர், திமுக எம்.பி செந்தில்குமாரை பத்திரமாக மீட்டு அங்கிருந்த அரசு இ-சேவை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு முன்னதாக தயாராக இருந்த பாமக தொண்டர் ஒருவர், அந்த அரசு இ-சேவை மையத்தின் கதவை மூடி, செந்தில்குமாரை உள்ளே செல்ல விடாமல் தடுத்தார். ஒரு வழியாக காவல்துறையினர் மற்றும் திமுகவினர் விரைந்து செயல்பட்டு, அரசு இ-சேவை மைய கதவைத்திறந்து எம்.பி செந்தில் குமாரை உள்ளே பத்திரமாக அமர வைத்தனர். 

அந்த பகுதி முழுவதும் பாமக தொண்டர்களால் சூழப்பட்டு, தொகுதிக்கு செய்யப்பட்ட நலன்கள் என்ன?. எப்படி வந்து வாக்கு சேகரித்தீர்கள்? என்று சரமாரி கேள்விகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால், கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Dr Senthilkumar MP Vs PMK Youngsters in Dharmapuri Pappireddipatti Village


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->