நாங்க முடிவுபண்ணிட்டோம்.. நீங்க?.. செந்தில் பாலாஜி பேச்சு.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தின் திமுக இணையதள உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, இணையதள சேர்க்கையை துவங்கி வைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி, திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் " எல்லோரும் நம்முடன் " என்ற திட்டத்தினை துவங்கி வைத்து, இணையதள உறுப்பினர் சேர்க்கையை துவங்கி வைத்தார். 

இந்த இணையதள பதிவின் மூலமாக மூன்றே நாட்களில் ஒரு இலட்சம் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் இணைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 10 ஆயிரம் உறுப்பினர்களையும் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திமுகவில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதிமுகவில் இன்னும் முதல்வர் தொடர்பாக ஒருமித்த கருத்து இல்லை " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Senthil Balaji Press meet 20 September 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->