மு.க.ஸ்டாலின் செயலால் விரக்தி.. நீதிமன்ற கதவுகளை தட்டிய திமுக எம்.எல்.ஏ.!! - Seithipunal
Seithipunal


ஆயிரம் விளக்கு தொகுதியின் திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் கு.க செல்வம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக டெல்லிக்கு திடீரென பயணம் செய்து, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்தார். 

இதனையடுத்து இவர் திமுகவில் இருந்த கட்சி தாவி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி, அரசியலில் பெரும் அதிர்வலையை பதிவு செய்தது. ஆனால், அங்கிருந்து தமிழகத்தில் திரும்பிய கு.க. செல்வம், பாஜக தேசிய தலைவர்களை மரியாதையை நிமித்தமாக காண சென்றதாக தெரிவித்துள்ளார். 

இவரது நடவடிக்கையில் இருந்த மாற்றத்தின் காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டார். இந்நிலையில், தற்போது கு.க செல்வம் திமுகவில் இருந்த நீக்கியதை எதிர்த்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

மேலும், இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், " திராவிட முன்னேற்ற கழகத்தின் விதிப்படி, உறுப்பினரை நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்றும், தி.மு.கவின் தலைவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும், எவ்வித விசாரணையும் இல்லாமல் தன்னை கட்சியில் இருந்த நீக்கிவிட்டதாகவும் " கூறியுள்ளார். 

இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், " திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் இந்த விஷயம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் " என்று உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Ku Ka Selvam Appeal in Chennai Licensing Court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->