நேரில் சென்று பார்த்தும், கலைஞருக்கு இடம் கொடுக்க மறுத்தார்கள் - மு.க ஸ்டாலின் பேச்சு.! - Seithipunal
Seithipunal


கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய, முதல்வரை நேரில் சந்தித்தும் தகுந்த பதில் கிடைக்கவில்லை என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின்" என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இதன்போது அவர் பேசியதாவது, " அண்ணா முதலமைச்சராக இருக்கையில் தான் மறைந்தார். அவருக்கு என்ன மருந்து கொடுக்கப்பட்டது, எப்படி மறைந்தார்? என விளக்கம் அளிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்து இதனை வருடங்கள் ஆகியும், சிகிச்சை முறைகள் குறித்த தகவல் இல்லை.

கலைஞரின் இறுதி ஆசை அண்ணாவின் அருகில் ஓய்வு எடுக்க வேண்டும் என்பது தான். ஆனால், அதனை அதிமுக மறுத்தது. மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறினார்கள். தமிழக முதல்வரை நேரில் சந்தித்தும் பலனில்லை. 

நீதிமன்றத்தில் காலையில் இருந்து காத்திருந்து, மதியம் அறிவிப்பு வெளியானது. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க அனுமதி அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. தீர்ப்பு நமக்கு சாதககமாக கிடைக்கவில்லை என்றால் நேரடியாக களத்தில் இறங்கி, என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்.

கலைஞரின் உடலை மெரினாவில் அண்ணாவின் அருகே நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். மக்களுக்காக உழைத்த மாபெரும் தலைவர், என்னிடம் கூறிய இறுதி ஆசை அது. அதனால் அந்த முடிவில் உறுதியாக இருந்தேன் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Speech about Kalangar Memorial at Marina Beach Issue 7 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->