தேர்தலில் சீட்டு கொடுத்தும் திமுகவிலிருந்து, பாஜகவுக்கு தாவிய நிர்வாகி.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மேற்கு திமுக ஒன்றியச் செயலராக பதவி வகித்து வந்தவர் இரா.முரளிதரன். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் அருகே உள்ள மேலவெளி என்ற கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

தற்போது நடைபெற உள்ள தேர்தலில் திமுக தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் முரளிதரனுக்கு தஞ்சாவூர் ஒன்றியக் குழுவின் 13-வது வார்டு ஒது்க்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, முரளிதரன் தஞ்சாவூர் ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், முரளிதரன் திடீரென தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். நேற்றிரவு திருச்சி வந்த  முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் முரளிதரன் பாஜகவில் சேர்ந்தார். அப்போது, பாஜக மாநிலப் பொதுச்செயலர் கருப்பு எம். முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஆர். இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

முரளிதரனுக்கும் தஞ்சாவூர் மாவட்ட திமுக  நிர்வாகிகள் சிலருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததுள்ளது. இதனால், முரளிதரன் அதிருப்தியில் இருந்து வந்தார். 

இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவை திரும்பப் பெறுமாறும், அந்த வார்டில் மற்றொருவர் போட்டியிடுவதாகவும்  முரளிதரனிடம் திமுக நிர்வாகிகள் கூறினாராம். இதனால், அதிருப்தியடைந்த முரளிதரன் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk member switching to bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->