ஸ்டாலினின் இதயத்தை நொறுக்கிய மரணம், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் மறைந்தார்! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய, முன்னாள் நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்களின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேவகோட்டையிலிருந்து டெல்லி செங்கோட்டை வரை சென்று –உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய, முன்னாள் நீதியரசர் திரு. ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன்.

"உச்சநீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது” என்று, டெல்லியில் அமர்ந்து கொண்டு நெஞ்சுயர்த்திப் பரிந்துரைத்தவர். தனது துணைவியார் மறைந்த 48 மணி நேரத்திற்குள் அவர் மறைந்திருப்பது, இதயத்தை நொறுங்கிப் போக வைக்கிறது.

ஒரே நேரத்தில் தன் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்து துயரத்தில் மூழ்கியுள்ள- அவரது புதல்வர், மூத்த வழக்கறிஞர் திரு ஏ.எல். சுந்தரேசன் அவர்களுக்கும்- குடும்பத்தினர், உறவினர்கள், அவரோடு பணியாற்றிய நீதியரசர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள்‌ நீதியரசர்‌ திரு ஏ.ஆர்‌. லட்சுமணன்‌ வழங்கிய வரலாற்றுச்‌ சிறப்பு மிக்க தீர்ப்புகள்:

பதினெட்டாவது இந்திய சட்ட ஆணையத்தின்‌ தலைவராக. 33. “சட்டக்‌ கமிஷன்‌ அறிக்கைகளை மத்திய அரசுக்கு "பெண்களுக்கு சம சொத்துரிமை வழங்கும்‌ சட்டங்களில்‌ "திருத்தங்கள்‌ கொண்டு வரப்‌ பரிந்துரை செய்தவர்‌. ஆசிட்‌ வீசும்‌ சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் தண்டனை அளிக்கும்‌ திருத்தங்களைப்‌ பரிந்துரைத்தவர்‌.

சென்னையில்‌ உச்சநீதிமன்றக்‌ கிளை அமைய வேண்டும்‌. என்ற ஆதரவாக மத்திய அரசுக்குப்‌ பரிந்துரை வழங்கியவர்‌. முல்லைப்‌ பெரியாறு அணையின்‌ உச்சநீதிமன்றக்‌ குழுவில் தமிழகத்தின்‌ சார்பில்‌ இடம்பெற்று நதி நீர் திட்டங்களை நிலை நாட்டினார்‌. இவ்வாறு அந்த இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk leader condolences to judge lakhsmanan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->