யார் வேண்டும் என்றாலும் வரட்டும்.. எங்களை ஒன்றுமே செய்ய முடியாது. நீலகிரியில் கனிமொழி சூளுரை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில், தேர்தலில் வெற்றியடைய அரசியல் கட்சிகள் தொடர்ந்து தயாராகி வருகிறது. திமுக தலைமையில் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், " விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் " என்ற பரப்புரையில் கீழ் திமுக மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று குன்னூர் மற்றும் ஊட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. கடந்த 10 வருடமாக படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். விவசாய பெருமக்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் யார் வேண்டும் என்றாலும் கட்சியை தொடங்கலாம். யார் கட்சியை தொடங்கினாலும், திமுகவின் வெற்றி என்பது எப்போதும் பாதிக்காது. அரசியலுக்கு வராத ஆட்களை பற்றி விமர்சனம் செய்வது சரியானதாக இருக்காது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Kanimozhi MP Statement about Rajinikanth Politics 5 December 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->