அண்ணன் சொல்கிறார், முதல்வர் செய்கிறார் - கனிமொழி பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் " விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் " என்ற பெயரில் திமுக மகளிரணி செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி பேசுகையில், " விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் வேளாண் சட்டங்களை தமிழக வேளாண்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் விவசாயி என கூறிவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்து வருகின்றனர்.

மு.க ஸ்டாலின் சொல்லி வந்த பயிர்க்கடன் தள்ளுபடியை தமிழக முதல்வர் செய்துள்ளார். மு.க ஸ்டாலினை முதல்வராக்க தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 வருடமாக புதிய தொழில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. இளைஞர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்கவில்லை. 

பாஜகவின் கைப்பாவையாக அதிமுக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. சுயமரியாதை உணர்வுகள், திராவிட கொள்கைகள், சமூக நீதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களை நாம் ஒழித்துக்கட்டி வருகிறோம். கருணாநிதி, அண்ணா, பெரியாரின் கொள்கையை நாம் காப்பாற்றி வருகிறோம். திமுக 200 தொகுதிக்கு மேல் கட்டாயம் வெற்றி பெரும் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Kanimozhi Election Campaign Dharmapuri 15 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->