முறைகேடான சொத்துக்கள்.. திமுக எம்பியிடம் அமலாக்கத்துறை விசாரணை.!! - Seithipunal
Seithipunal


சட்டத்திற்கு விரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழங்கி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

தமிழகத்தின் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மேஈது சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அமலாக்க துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகன் எம்.பியின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சில நாட்களுக்கு முன்னதாக சோதனை நடத்தியுள்ளனர். 

இந்த சோதனையின் போது, பல ஆதாரங்களின் அடிப்படையில் சட்டவிரோதமாக ரூ.65 கோடி அளவிற்கு சொத்துக்கள் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெகத்ரட்சகன் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஜெகத்ரட்சகனிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பவே, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகியுள்ளதாகவும், அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Jagathratchagan went Chennai Enforcement office due to investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->