திமுக கார்ப்பரேட் கம்பெனி - தமிழக முதல்வர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சமயத்தில், திமுகவின் மத்திய அமைச்சர் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் கீழ் சி.பி.ஐ மேல் முறையீடு விசாரணை நடந்து வருகிறது. அம்மாவின் அரசு இணையத்தளம் வாயிலாக டெண்டர் விடுத்து வருகிறது. இந்த டெண்டரில் எப்படி ஊழல் நடைபெறும். கடந்த திமுக ஆட்சியில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டெண்டர் விடுத்து வந்தனர். திரைமறைவில் பல்வேறு லெட்டர் பேடு நிறுவனங்களிடம் டெண்டர் கொடுத்து திமுக ஊழல் செய்தது. 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் கொடுத்தனர். அதில் அவர்கள் கொடுத்த ஊழல் தொடர்பான டெண்டர் கடந்த வருடமே ரத்து செய்யப்பட்டுவிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக உடையும் என்று எதிர்பார்த்தார்கள். எனது மேஜையின் மீது ஏறியே சட்டப்பேரவையில் திமுகவினர் நடனமாடினார்கள். இதுபோல பல அட்டூழியம் செய்தும் அதிமுகவின் ஆட்சியை ஒடுக்க முடியவில்லை என்ற வயித்தெரிச்சலில் திமுகவினர் உள்ளனர். 

கமல் நடிப்பில் பெரியவராக இருக்கலாம். அரசியலில் ஒன்றுமே இல்லை. தமிழகத்தை பற்றி கமலுக்கு என்ன தெரியும். 70 வயது வரை நடித்துவிட்டு, இப்போது ரிட்டயர்டு காலம் வந்ததும் அரசியலுக்கு வருகிறார்கள். நாடாளுமன்ற கூட்டணி தமிழகத்தில் அப்படியே தொடரும். அதிமுக தலைமையில் கூட்டணி அப்படியே இருக்கிறது. திமுக கார்ப்பரேட் கம்பெனி என அவரே ஒற்றுக்கொண்டுள்ளார். திமுகவில் பல மூத்த தலைவர்கள் இருந்தும், ஸ்டாலின் மற்றும் அவருக்கு அடுத்தபடி உதயநிதி ஸ்டாலின் என தொடருகிறது. கூட்டணி மந்திரிசபையை அதிமுக ஏற்றுக்கொள்ளாது. அது எங்களின் நிலைப்பாடு " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK is a Corporate Company Says by TN CM Edappadi Palanisamy 28 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->