பகுத்தறிவு ஆட்சியில் சித்தா சிகிச்சையா?..! திமுக எம்.பி செந்தில்குமார் சர்ச்சை ட்விட்..!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தொற்றை தமிழக அரசு கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், சென்னையில் சித்தா மூலமாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பிரத்தியேக சிகிச்சை மையங்களும் தொடங்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த முதல் கொரோனா அலை பரவலில் சித்தா மருத்துவம் மூலமாக பலரும் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வந்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாவது கொரோனா அலை பரவி வரும் நிலையில், அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்த சூழலில், தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் ட்விட் பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "  முற்போக்குத் கட்சியான திராவிட கட்சியில் பகுத்தறிவு ஆட்சியில், அறிவியல் முறையில் உறுதி செய்யப்படாத சித்தா முறைகளை பயன்படுத்துவது மனித வளத்தை வீணாக்குவதற்கு சமம். 

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்படாத ஒரு மருந்தை, தமிழக பகுத்தறிவு அரசு ஊக்குவிக்க கூடாது. அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையிலான மருந்துகளை கண்டறிய இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். தமிழக அரசும் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் " என்று தெரிவித்துள்ளார். இவரது ட்விட்டர் கருத்துக்கள் சித்தா மற்றும் தமிழ் மருத்துவ ஆர்வலர்களிடையே பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Dharmapuri MP Dr SenthilKumar Tweet about Against Siddha Treatment 17 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->