ஒரு நாளைக்கி 5 ஆயிரம் வந்துரனும்.. பார் உரிமையாளர்களுக்கு திமுக பிரமுகர்கள் பகிரங்க மிரட்டல்.!! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் பார் உரிமையாளரிடம் தினமும் ரூபாய் 5 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டுவதாக திமுக பிரமுகர்கள் இருவரின் மீது புகார்கள் எழுந்துள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய இளைஞரணி திமுக அமைப்பாளராக இருந்து வருபவர் பாலச்சந்தர். இவர் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டுவரும் மதுபான கடைகளுக்கு சென்று, அதன் உரிமையாளர்களை சந்தித்து தன்னை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமது யாசின் அனுப்பியதாக கூறியுள்ளார். 

மேலும், தங்களுக்கு தினமும் ரூபாய் 5 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்றும், பணம் கொடுக்க முடியாத பட்சத்தில் வேறு ஆட்களை வைத்து நாங்களே பார்களை கவனித்து கொள்கிறோம் என்றும், நீங்கள் பாரை அப்படியே விட்டுவிட்டு சென்று விடலாம் என்றும் மிரட்டியுள்ளார். 

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான உரிமையாளர்கள், கொண்டாமுத்தூரில் இருக்கும் முகமது யாசின் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசியுள்ளனர். இதன் போது, அவரும் மிரட்டல் தொனியில் அதே பதிலை கூறியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், பார் உரிமையாளர்கள் தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் இன்று பதவி ஏற்கும் நிலையில், இது தொடர்பான சம்பவங்கள் நடக்கிறதே., நாங்கள் எப்படி பிழைப்பு செய்வது?., மாதத்திற்கு ரூபாய் பத்தாயிரம் கேட்டாலும் கொடுத்து விடலாம், ஒரு நாளைக்கு ரூ. 5 ஆயிரம் என்றால் எங்கே செல்வது? என்று புலம்பி தவிப்பதாகவும் தெரியவருகிறது. 

இது தொடர்பாக சங்க நிர்வாகிகளும் கலந்து பேசி போராட்டம் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோவை மண்டலத்தில் திமுக பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், அங்குள்ள திமுக உறுப்பினர்கள் அவரது தலைவரின் பெயரைக் கூறி அட்டகாசம் செய்வது பெரும் அச்சத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Coimbatore Thondamuthur Admin Threatening WineShop Bar Owners want Bribery 7 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->