நாகையில் பாஜக-திமுகவினர் இடையே அடிதடி! மருத்துவமனையில் 7 பேர் அனுமதி! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டத்தை அடுத்த அக்கரைப்பேட்டை டாட்டா நகர் பகுதியை சேர்ந்த விஜயேந்திரன் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் கடந்த மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவில் இணைந்த விஜயேந்திரனுக்கு பாஜக மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக அந்தப் பகுதியில் விஜயேந்திரனின் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்பொழுது திமுக நகர உறுப்பினர் ஞானமணியின் மளிகை கடையில் பாஜகவினர் வெடித்த பட்டாசு விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் திமுக நகர உறுப்பினர் ஞானமணிக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக மற்றும் திமுக தொண்டர்கள் டாடா நகர் பகுதியில் அடிதடியில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவை சேர்ந்த 5 பேருக்கும் திமுகவைச் சேர்ந்த நகர உறுப்பினர் உட்பட 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஏழு பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அக்கரைப்பேட்டை டாடா நகர் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அக்கரைப்பேட்டை பகுதியில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk Bjp clash in nagai 7 people admitted in hospital


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->