கரோனா தடுப்பு நடவடிக்கை... நிதியுதவி அறிவித்த திமுக..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது வரை கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கையும் 29 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்ச பாதிப்பாக கேரளா, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளித்து உதவி செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் கோரிக்கை வைத்தது.

இதன்படி பல்வேறு தரப்பில் இருந்தும் நிதிஉதவி அரசிற்கு தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. இந்நிலயில், திமுக சார்பாக நிதிஉதவி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நிதிக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நேரடி வங்கிக்கணக்கின் கீழ் இணையதள பரிவர்த்தனை  மூலமாக வழங்கப்படும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Announce fund corona virus fund


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->