திடீர் தடை..? ஆடாத ஆட்டம் ஆடிய திமுக, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் வைத்த குட்டு : பேரதிர்ச்சியில் தொண்டர்கள்..! - Seithipunal
Seithipunal


திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு வகையிலும் விளம்பரங்களை செய்து வருகின்றன. இந்நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், பொய் வாக்குறுதிகள் மற்றும் ஆதாரமற்ற புகார்களை மையப்படுத்தி, விளம்பரங்களை எடுத்து ஒளிபரப்பி வருகிறது.

திமுக தேர்தல் விளம்பரம் தொடர்பாக, அதிமுக புகார் மனு அளித்தது. இதுகுறித்து, அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் சின்னத்தோடு விளம்பரம் தேடும் விதமாகவும், வாக்குச் சேகரிக்கும் விதமாகவும் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த விளம்பரங்களில் தேர்தல் நெறிமுறைகளின்படி யார் விளம்பரம் கொடுக்கிறார்கள் என்ற விவரமோ, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றதற்கான எண்ணோ இடம்பெறவில்லை. இது முற்றிலும் தேர்தல் நடத்தை நெறிகளுக்கு எதிராக அமைந்துள்ளது. எனவே, அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக மற்றொரு புகார் மனுவை அதிமுக அளித்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உண்மைக்கு மாறான கருத்துகளை தூத்துக்குடி பிரசாரத்தில் திமுக சார்பில் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரை ஏற்ற தேர்தல் ஆணையம், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

English Summary

DMK-and-Congress-parties-prohibit-election-promotions


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது




கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது




Seithipunal