வெளியே தெரிந்தால் அவமானம்! சத்தமே இல்லாமல் திமுக பொறுப்பிலிருந்து இருவர் நீக்கம்! பகீர் பின்னணி!   - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் இரண்டு திமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகிகள் நீக்கப்பட்டது குறித்து பொதுவான அறிவிப்புகள் ஏதும் வெளியாகாமல், முரசொலியில் நிர்வாகிகள் நீக்கம் மற்றும் புதிய நிர்வாகிகளை நியமித்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் லாட்டரி விற்பனை மற்றும் நம்பர் விளையாட்டு என சொல்லப்படும் சூதாட்டம் அமோகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் குடியாத்தத்தை  தலைமை இடமாக கொண்டு தான் இந்த சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும், இந்த சூதாட்டத்தில் தினக்கூலிகள் தான் பங்கேற்கிறார்கள் எனவும், நாள் முழுவதும் உழைத்து வரும் பணத்தினை தினக்கூலிகள் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சூதாட்டத்தினை நடத்துபவர்களின் பின்னணியில் திமுக நிர்வாகி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. வேலூர் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், அவர்களுக்கு பின்னால் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டதுடன், அவருக்கு பதிலாக அதே குடியாத்தத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் அந்த பொறுப்பில் புதியதாக நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார். 

அதேபோல கே வி குப்பம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஜெயக்குமாரும் குற்றப்பின்னணி கொண்டவர் என கூறப்படுகிறது. மேலும் ஒரு குற்ற வழக்கில் ஜெயக்குமார் தலைமறைவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவரும் கட்சிக்கு அவபெயரை உண்டாகிய காரணத்திற்காக ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு பதிலாக அதே பகுதியை சார்ந்த சீதாராமன் என்பவர் மேற்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்படுவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் செய்தி வெளியாகியுள்ளது. 

வெளியே தெரிந்தால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படக்கூடும் என்பதால் சத்தமே இல்லாமல் குற்றப்பின்னணி உடைய நிர்வாகிகளை சத்தமே இல்லாமல் திமுக தலைமை கமுக்கமாக நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Administrators released from their party post


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->