உதயநிதியை கடுமையாக எச்சரித்த உடன்பிறப்பு.! உங்கப்பா கதை உனக்கு தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


உதயநிதி ஸ்டாலின் குறித்து திருப்பூரைச் சேர்ந்த திமுக இளைஞர் அணி செயலாளர் கலையரசன் விமர்சனம் செய்துள்ளது தற்பொழுது சர்ச்சையாகி இருக்கிறது. 

அவரது விமர்சனத்தில், " தம்பி உதயநிதி நீங்கள் ஓர் இசை விமர்சித்ததை நான் கேட்டேன். நானும் திமுக காரன் தான். பல வருடங்களாக அரசியலில் எனக்கு இருக்கும் அனுபவம் குறித்து உங்களுக்கு கூறுகிறேன். அவர்களிடம் ஒட்டவும் கூடாது. உரசவும் கூடாது உங்களுக்கு அது தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு கூட்டத்தில் நீங்கள் பேசும் பொழுது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று மிரட்டியதை பார்த்தேன்.

அரசியல்வாதிகளை போல ஐந்தாண்டு அதிகாரம் இல்லை அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் உண்டு அதிகாரம். ஒரு போலிசை இன்னொரு போலிஸ் எப்போதும் விட்டு தரமாட்டார். உயர் அதிகாரியையே இப்படி அவமானப்படுத்தும் விதமாக மிரட்டியதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்.? ஒருவேளை திமுக ஆட்சிக்கு வரலைனா? 

நீங்க பிரச்சனையில் மாட்டும் பொழுது தெரியும். அவர்கள் லாடம் கட்டிவிடுவார்கள். மிசாவில் உங்க அப்பாவுக்கு நடந்தது நினைவிருக்கா? சிட்டிபாபு இல்லன்னா உங்கப்பாவே இல்லை. எப்படி அடி வாங்கினார் என்பது அவருக்கு தான் தெரியும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK admin advice to udhayanithi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->