உருவாகிறதா புதிய கூட்டணி? விசிக, தேமுதிக ஓரணியில் இடம்பெற வாய்ப்பு!  - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி சென்னை வந்துள்ள சசிகலா, தற்போது தி நகரில் உள்ள அவர் உறவினர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை அவரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து வரும் தேமுதிக, கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அதிமுக தரப்பிலிருந்து மௌனமே பதிலாக இருந்து வருகிறது, இதற்கிடையே பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். 

அதேபோல பிரேமலதா சந்திப்பை உறுதி செய்யும் விதமாக பிரதிபலிக்கும் விதமாகவே சசிகலாவிற்கு வருகைக்கு விஜயகாந்தின் மகன் பிரபாகரனும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரேமலதா நாளை சசிகலாவை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியத. இதனையடுத்து அதிமுக தேமுதிக கூட்டணி ஆனது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அதே சமயம் அமமுக அதிமுக இணைப்பு நடைபெறாத பட்சத்தில், அமமுக தனியாக போட்டியிட்டால் அந்த அணியில் தேமுதிக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் கடுமையான அதிர்ச்சியுடன் இருக்கும் திருமாவளவன் தலைமையிலான விசிக, இந்த அணியில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு சீட்டுகள் மற்றும் மூன்று சீட்டுகள் என திமுக கூட்டணி தெரிவித்து வருவதால் அதிருப்தியில் இருக்கும் திருமாவளவன் மாற்று அணி குறித்தும் சிந்திக்க ஆரம்பித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாகவே அண்மையில் நடைபெற்ற விசிக சிறப்பு பொதுக்குழு தீர்மானங்கள் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK VCK AMMK May be Alliance


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->