தனது அரசியல் அங்கீகாரத்தை இழந்ததா தேமுதிக?! அதிர்ச்சியில் பிரேமலதா!!  - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர். தற்போது நான்கு இடங்களிலும் தோல்வியைத் தழுவியதன் காரணமாக அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது.

மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 6 சதவீத ஓட்டுகளை ஒவ்வொரு கட்சியும் பெற்றிருக்க வேண்டும். ஒரு பாராளுமன்ற தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது 6 சதவீத வாக்குகளையும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும்.

dmdk seithipunal க்கான பட முடிவு

ஒட்டுமொத்த சட்டசபை உறுப்பினர் இடங்களில் 3 சதவீத உறுப்பினர்களையாவது கொண்டிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி ஆகும். ஆனால் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகளை தேமுதிக பெற்று இருக்கின்றது.

இதன்காரணமாக  தேமுதிகவின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இனி வரும் தேர்தலில் தேமுதிகவிற்கு  முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. இதனால், பிரேமலதா, சுதீஷ் உட்பட தேமுதிகவினர் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk rights may cancelled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->