டி.கே.சிவகுமாரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து விபத்து.. மயிரிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்!
DK Shivakumars convoy vehicle veered off and met with an accident The driver who escaped with his life!
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்.அதில் பயணித்த பணியாளர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர்.
ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சென்ற கார் மோதி தொண்டர் ஒருவர் பலியான சம்பவம் ஆந்திராவில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் அவர்கள் கான்வாய் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் கான்வாய் வாகனம் நேற்று (சனிக்கிழமை) மாலை மண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியில் உள்ள விரைவுச் சாலையில் கவுடஹள்ளி அருகே இந்த விபத்து நடந்தது.

கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பயணித்த காருக்கு பின்னல் வந்த எஸ்கார்ட் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. அப்போது இதில் காயமடைந்தவர்கள் மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதற்கிடையில், கான்வாய் விபத்துக்குப் பிறகு டி.கே. சிவகுமார் பெங்களூருக்குத் திரும்பினார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
DK Shivakumars convoy vehicle veered off and met with an accident The driver who escaped with his life!