பாஞ்சாகுளம் தீண்டாமை விவகாரம் : விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்! - Seithipunal
Seithipunal


இளைஞரின் மத்திய அரசு பணிக்கு தடையாக இருக்கும் பழைய வழக்கால் தீண்டாமை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் வட்டத்திற்கு உட்பட்ட பாஞ்சாகுளம் கிராமத்தில் ஒரு சமுதாத்தை சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு மற்றொரு சமுதாய பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வழங்க கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக சமூக வளைதளங்களில் வீடியோ பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரு சமூகங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ் வழக்குத் தொடர்பான விசாரணை சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வந்தது . அப்பொழுது ஒரு தரப்பின்னர் வாழ்க்கை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போதும் இரு தரப்பினர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞருக்கு மத்திய அரசு வேலை கிடைத்தும் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாகவே ஒரு சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க கூடாது என மற்றொரு சமூகம் சார்பாக ஊர் மக்களுக்கு உத்தரவிட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் இரு தரப்பினர் இடையே சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District Collector gave an explanation regarding the cruelty of untouchability


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->