அரசு தரும் பணத்திற்காக, பட்டியலில் சேர்க்கப்பட்ட இறந்தவர்களின் பெயர்கள்….! முறைகேட்டினை எதிர்த்து போராடிய மக்கள்…! - Seithipunal
Seithipunal


 

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு,  தலா 2000 ரூபாய் வழங்கப்படும், என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக, தற்போது தமிழக மாநிலம் முழுவதிலும், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஒன்றியம், நாகையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட புது ரோடு பகுதியில், கடந்த சில நாட்களாக, இந்தக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், ஆளும் கட்சியினர் மற்றும் வேண்டியவர்களின் பெயர்களை சேர்த்தும், இறந்தவர்களின் பெயர்கள், கற்பனையாக சேர்க்கப்பட்ட பெயர்கள் மற்றும், ஊரில் இல்லாதவர்கள் பெயர்களும்  இருப்பதாகவும், பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை.

இது அதிகாரிகள் துணையுடன் தான் நடக்கிறது, என்று கொதிப்படைந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர், நாகையகோட்டை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.

முறையாக கணக்கிட்டு, உரியவர்களுக்கு, பணத்தை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இறந்தவர்கள் மற்றும் இல்லாதவர்களின் பெயரையும் சேர்த்து, அந்தப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திட்டமிடுவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், உண்மையில் பலன் அடைவோரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும், புகார் கூறினர்.

பின், எம்.எல்.ஏ. பரமசிவம், அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dispute in the list to get fund


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->