காணாமல் போன ஏரியை கண்டுபிடித்த அதிகாரிகள்.! மக்கள் பாராட்டு!! - Seithipunal
Seithipunal


30 ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போன குளத்தை கண்டுபிடித்த அதிகாரிகள்  ஆச்சர்யமூட்டும் சம்பவம் நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள செட்டித்தங்கள் ஊராட்சியில் உள்ள ஏரி ஒன்று காணாமல் போனதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். 

30 ஆண்டுகளுக்கு மேலாக செட்டிக்குளம் என்ற பெயரில் ஒரு குளம் இருந்ததது.  இந்த இடத்தை தற்போது  கலியமூர்த்தி, வீரமணி, ஸ்ரீதர், வெங்கடாஜலபதி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து விளை நிலமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

ஊராட்சி கிராம மக்கள் ஒன்றிணைந்து வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்து குளத்தை ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முறையிட்டனர். நீண்ட காலமாக இருக்கும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

பொதுமக்களின் புகார்களை ஏற்ற  காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது விரைவு  நடவடிக்கையால் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலரை அழைத்து முறையாக அளவீடு செய்து, சுமார் ஒரு ஏக்கர் 21 சென்ட் அளவீடு உள்ள அந்த குளத்தை, காட்டுமன்னார்குடி காவல்துறை ஆய்வாளர் சியாம் சுந்தர் மற்றும் வட்டாட்சியர் உதவியோடு பொக்லைன்  இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீண்டும் குளமாக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

disappeared lake discovered officers


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->