கடன் தொகைக்காக அவதூறு பேச்சு.. கடனை முகத்தில் விட்டெறிந்து, செருப்படியால் விளாசியெடுத்த வீரமங்கை.! - Seithipunal
Seithipunal


வேடசந்தூர் அருகே கடன் கொடுத்தவர் கடுமையாக பேசியதால், பணத்தை திருப்பிக் கொடுத்த பெண்மணி செருப்பால் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் புங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரிடம் வெள்ளைத்தாய் என்ற பெண்மணி ஒன்றரை இலட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். 

இந்த பணத்தை சொன்ன நேரத்தில் தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. வறுமையால் வெள்ளைத்தாயால் பணம் கொடுக்க முடியாமல் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன் அவரைக் கடுமையாக தாக்கி அவதூறாக மற்றும் கொச்சையாக பேசியுள்ளார். 

இதனையடுத்து பெரும் ஆத்திரத்துக்கு உள்ளாகிய வெள்ளைத்தாய் வேறொரு இடத்தில் அவசரமாக பணத்தை ஏற்பாடு செய்து, சந்திரசேகரன் வீட்டிற்குச் சென்று தான் வாங்கிய ஒன்றரை இலட்சம் ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். மேலும், தன்னை அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க கூறியுள்ளார். இதற்கு சந்திரசேகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வெள்ளைத்தாய் பணத்தை கொடுத்துவிட்டேன், நீங்கள் மன்னிப்பு கேளுங்கள் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு சந்திரசேகரன் மறுப்பு தெரிவிக்கவே, அவரை செருப்பால் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். 

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சந்திரசேகருக்கு காயம் இல்லை என்றாலும், தன்னை பெண்மணி அடித்துவிட்டார் என்ற ஆதங்கத்தில் மருத்துவமனையில் சென்று அனுமதி ஆகி ஒரு நாடகம் நடத்தி, காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக எரியோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடனை திரும்பி கேட்டதில் தவறில்லை.. ஏற்கனவே கொரோனா சூழலால் மக்கள் வருமானத்தை இழந்து துன்பப்பட்டாலும், கடனை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி தந்துகொண்டு தான் இருக்கிறார்கள். இதுபோல அவதூறாக பேசி ஸ்லீப்பர் சாட் வாங்க வேண்டுமா?. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Vedasandur Loan Issue Man Using Abused Words to Woman Woman Return Money and attacks by Slipper


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->