லாரி லாரியாக சிக்கும் கஞ்சா.. கிலோ கணக்கில் பறிமுதல் செய்யும் காவல்துறை.. திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பகீர்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையானது அதிகளவு நடைபெற்று வந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், மெட்டு, வருசநாடு பகுதியில் கஞ்சாவை வனப்பகுதியில் திருட்டுத்தனமாக பயிரிட்டு, தமிழகம் முழுவதும் சப்ளை நடைபெற்று வந்தது. இதுமட்டுமல்லாது கேரளாவிற்கும் அனுப்பப்பட்டு வருகிறது. 

இதனை தடுப்பதற்கு காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துசாமியின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற சோதனையில் 300 கிலோ கஞ்சா பிடிபட்டது. இந்த கஞ்சாவை கடத்தி வந்த கும்பலையும் காவல் துறையினர் கைது செய்திருந்த நிலையில், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்திற்கு கடத்த முயற்சித்தது அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவின் அறிவுறுத்தலின் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகையில், திருச்சி - திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 200 கிலோ கஞ்சா பிடிப்பட்டது. இதனைப்போன்று திண்டுக்கல்லை அடுத்துள்ள சீலப்பாடி பகுதியில் வீட்டில் 100 கிலோ கஞ்சாவும் பிடிபட்டது. இந்த கஞ்சாவை கடத்தி வந்த திண்டுக்கல்லை சார்ந்த கிருஷ்ணசாமி, முத்து, பரணி, ஜெய்சங்கர், ராகவன், யுவராஜ் மற்றும் புதுக்கோட்டையை சார்ந்த ஆண்டியப்பன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Theni Kanja Supply gang arrest by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->