ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் விலக்க அவர் ஒருவரால் தான் முடியும் - முன்னாள் அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சந்திப்பில், " சசிகலா ஒரு தாய் அல்ல., அவர் ஒரு பேய். அதிமுகவை குறுக்கு வழியில் கைப்பற்ற கடுமையான நாடகம் நடத்தி வந்தார். 

அவரது நாடகம் எதுவும் தற்போது வரை எடுபடவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது? என்பது தொடர்பான விஷயம் சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அதனை சசிகலா வெளியே கூறுவார். அவருக்கு மனசாட்சியும் கிடையாது ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது " என்று தெரிவித்தார்.

இதனால் அதிமுக - சசிகலா வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு பின்னர் சசிகலா ஜெயிலுக்கு சென்றுவிட்ட நிலையில், அதிமுக பல கோணங்களில் பயணித்து பின்னர் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கைவசம் வந்தது. டிடிவி - சசிகலா ஆகியோர் சேர்ந்து தனிக்கட்சி தொடங்கினர். 

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பு தனியாக கூட்டணி சேர்ந்ததும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, அன்று அவரை (சசிகலாவை) நம்பி நாங்களும் இருந்துவிட்டோம் என்று பல பேச்சுக்கள் தொடர்ந்து பேசி வந்தனர். கடந்த சில வருடமாக தேர்தல் காரணமாக இந்த பிரச்சனை மீண்டும் எழாமல் இருந்த நிலையில், நேற்று முன்னாள் அமைச்சர் மீண்டும் ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் சசிகலா தொடர்பாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Natham Visvanathan Pressmeet about Jayalalitha Death 19 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->