கழுத்தை நெரித்த கடன் தொல்லை.. கொய்யாப்பழம் சாப்பிட்டு தற்கொலை செய்த தம்பதி..!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோசப்காலனி பகுதியை சார்ந்தவர் மோகன் (வயது 56). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி விஜயா (வயது 51). இவர்கள் இருவருக்கும் தமிழ்செல்வி என்ற மகள் உள்ள நிலையில், அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதால், மோகன் மற்றும் விஜயா தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மோகனால் ஆட்டோ சவாரிக்கு செல்ல இயலவில்லை. இதனால் அவரது குடும்பம் மிகவும் வறுமையில் தள்ளாடியுள்ளது. மேலும், கடன் பிரச்சனையும் இருந்ததால் மோகனும், விஜயாவும் செய்வதறியாது தவித்துள்ளனர். இதனால் கடுமையான விரக்தியில் இருந்த தம்பதி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இவர்களின் தற்கொலைக்கு முன்னதாக அங்குள்ள என்.எஸ். நகரில் வசித்து வரும் தனது தம்பி வீரமணிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த சகோதரர் சமாதானம் செய்ய முயற்சிக்கவே, இதற்குள் மோகன் அழைப்பை துண்டித்துள்ளார். 

இதனால் பயத்துடன் வீரமணி தனது அண்ணனின் வீட்டிற்கு விரையவே, தம்பதிகள் இருவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் இருவரையும் மீட்டு திண்டுக்கல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே, மருத்துவர்களின் சோதனையில் இருவரும் இறந்தது தெரியவந்துள்ளது. 

இதன்பின்னர் இது குறித்து திண்டுக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்க்கு விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கொய்யாப்பழத்தில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. தற்கொலை முன்னர் மோகன் எழுதிய கடிதத்தில் கடன் சுமையால் தற்கொலை முடிவு எடுத்துக்கொள்வதாக எழுதியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul couple suicide due to loan problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->