காவல் அதிகாரியின் குடியைக்கெடுத்த குடி.. பயத்தில் தற்கொலை செய்துகொண்ட சோகம்.! - Seithipunal
Seithipunal


குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொள்வதாக மனைவியும், மகளும் நடத்திய நாடகம் தலைமைக் காவலரை பயத்தில் தூக்கிட்டு மரணிக்க வைத்த சோகம் அரங்கேறியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் கோகுல் நகர் பகுதியைச் சார்ந்தவர் இரத்தனகிரி. இவர் சின்னாளபட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இரத்னகிரிக்கு நாகஜோதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 

இந்நிலையில், மதுவுக்கு அடிமையான இரத்தினகிரி, தினமும் மதுபானம் அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் நாகஜோதி, கணவரின் செயல்பாடுகளால் மிகவும் வெறுப்போடு இருந்து வந்துள்ளார். மேலும், என்றாவது ஒருநாள் உன்னால் நான் தற்கொலை செய்யப் போகிறேன் என்று அவர் வருத்தம் தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம்போல மதுபானம் அருந்திவிட்டு வந்த இரத்தினகிரி மனைவியை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி தனது அறைக்கு மகள்களையும் உடன் அழைத்துச் சென்று கதவை உட்புறமாக தாழிட்டு உள்ளார். முதலில் இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்ட இரத்தனகிரி, தனது அறைக்குச் சென்று உறங்கிய நிலையில், அதிகாலை 3:00 மணி அளவில் அவருக்கு திடீரென உறக்கம் நீங்கி மனைவி மற்றும் மகள் தற்கொலை செய்து இருப்பார்கள் என்ற எண்ணம் எழுந்துள்ளது. 

இதனையடுத்து, அவர் மனைவி மற்றும் மகளின் அறை கதவை தட்டிய நிலையில், கணவர் மீண்டும் சண்டை போட வந்துள்ளார் என்று எண்ணிய நாகஜோதி கதவை திறக்காமல் இருந்துள்ளனர். மேலும், குரல் கொடுக்காமலும் இருந்துள்ளார். இதனால் உண்மையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக எண்ணிய இரத்தனகிரி, தனது அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

நீண்ட நேரம் கேட்ட கதவு தட்டும் சத்தம் நின்று போனதால், கணவர் உறங்கி இருப்பார் என்று நினைத்து நாகஜோதியும் உறங்கியுள்ளார். பின்னர், காலையில் கணவர் நீண்ட நேரமாக அறையிலிருந்து வெளியே வரவில்லை என்பதை அறிந்த நாகஜோதி, சந்தேகமடைந்து அறையின் கதவை திறக்க முயன்றுள்ளார். அதை திறக்க முடியாததால் உறவினர்களை அழைத்து கதவை உடைத்து பார்க்கையில், இரத்தனகிரி உள்ளே சடலமாக தொடங்கியுள்ளார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இரத்தினகிரியின் மூத்த மகள் மருத்துவம் பயின்று வருகிறார்., இளைய மகள் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • குடி குடியை கெடுக்கும் என்று மக்களுக்கு நல்வழிப்படுத்த வேண்டிய காவல் அதிகாரியே மதுவின் கொடுமையால் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Chinnalapatti Cop Ratnagiri Suicide due to Audit Drinks and Rupture With Wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->