டிஜிட்டலாக மாறும் டாஸ்மாக்.. தமிழக குடிமகனுக்கு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழக டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்கள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சார்பில் 5 ஆயிரத்து 330 மதுபான கடைகள் தமிழகத்தில் உள்ளது. 

அனைத்து மதுபான கடை களிலும் மின்னணு விற்பனை இயந்திரங்கள் நிறுவுவதற்காக வங்கிகளிடம் ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 7 வங்கிகள் கலந்துகொண்டனர். அவற்றில் ஐசிஐசிஐ வங்கி மற்ற வங்கிகளை விட குறைவான ஒப்பந்த தொகையை கோரியதால், மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்கு ஐசிஐசிஐ வங்கி தேர்வாகியுள்ளது. 

டாஸ்மாக் இயக்குனர் குழுமம், ஐசிஐசிஐ வங்கியுடன் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ள டாஸ்மாக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர். தற்போது ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விற்பனை எந்திரங்கள் வாயிலாக டாஸ்மாக் கடையில் மது வாங்கும் வாடிக்கையாளர்கள், அதற்குரிய தொகையை டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு, கியூ ஆர் கோடு, இன்டர்நெட் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம். 

மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவும் பணிகள் சுமார் இரண்டு மாதங்களில் நிறைவடையும், டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இந்த மின்னணு விற்பனை கருவியை பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மின்னணுறு விற்பனை கருவிகள் பொருத்தப்பட்டு செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதத்தில் டிஜிட்டல் முறை விற்பனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

digital tasmac for tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->