தீரன் சின்னமலையின் நினைவு நாள்... நாம் தமிழர், அமமுக சார்பில் மரியாதை.!! - Seithipunal
Seithipunal


தீரன் சின்னமலை கவுண்டரின் நினைவுநாளினை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் சிறப்பித்தனர். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரராக திகழ்ந்து, ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய மன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், ஈரோடு மாவட்டம், ஓடாநிலை - தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக நெசவாளர் அணி செயலாளர் திரு.தரணி A.ஷண்முகம்,

ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.D.தங்கராஜ், ஈரோடு மாநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சக்தி (எ) S.சிவசுப்பிரமணியன், ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.S.R.செல்வம், ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் திரு.P.லக்ஷ்மணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட / வார்டு கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வுடன் நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது, " வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 216ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (03-08-2021) காலை, சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், 'விடுதலை போராட்ட வீரர் நமது வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் நினைவைப் போற்றுகின்ற நாள் இன்று. வீரமிக்க எமது மூதாதைகளில் தீரன் சின்னமலை வேறுபட்டவர். தீரன் சின்னமலை மன்னரோ, மன்னரின் வாரிசோ இல்லை. அரசர் அழைத்தால் மக்கள் போரிட வருவார்கள். ஆனால் தீரன் சின்னமலை ஒரு சாதாரணக் குடிமகன். அவர் மக்களை ஒன்றுதிரட்டி படைகட்டி போராடியதுதான் புரட்சி. 

அப்படிபட்ட வீரமிக்க எமது பெரும்பாட்டன் தூக்குக் கயிற்றை வெள்ளைக்காரன் கொண்டுவந்தபோது, அவனைத் தள்ளிவிட்டு தூக்குக் கயிற்றைத் தானே மாட்டிக்கொண்டு, நீ என் எதிரி எனக்கு மரணத்தைக்கூட நீ பரிசாகத் தரக்கூடாது என்று முழங்கிய பெருந்தகை. அப்படிப்பட்ட நமது பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில் மானமும் வீரமும் உயிரென நினைக்கின்ற தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப்பெரும்பாட்டனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் உள்ளபடியே பெருமிதம் அடைகிறோம்' என்று குறிப்பிட்டார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dheeran Chinnamalai Gounder Memorial Day NTK and AMMK 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->