தருமபுரி: நால்வர் கும்பலால் கரும்பு வியாபாரி கொடூர கொலை.. நீதிகேட்டு உறவினர்கள் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அஸ்தகிரி கிராமத்தை சார்ந்தவர் முனியப்பன். இவர் கரும்பு வியாபாரியாக பணியாற்றி வருகிறார். முனியப்பன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வியாபாரத்தை முடித்துவிட்டு, இரவு 10 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்துள்ளார்.

இதன்போது, அந்த கிராம சாலை வழியாகவே கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று வந்துள்ளது. இந்த வாகனம் முனியப்பனை முந்தி செல்ல முயற்சி செய்த நிலையில், குறுகலாக இருந்த சாலையால் அவராலும் வழிவிட முடியவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த கொடூரர்கள், முனியப்பனை இடைநிறுத்தி வழிவிட்டு செல்ல இயலாதா? என்று கேட்டவாறே அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். நால்வர் கும்பலால் அரங்கேறிய தாக்குதலில் முனியப்பன் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

பின்னர் கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், அவ்வழியாக பயணம் செய்தவர்கள் முனியப்பன் சடலமாக கிடப்பதை கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் முனியப்பனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த முனியப்பனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், இது குறித்து காவல் துறையினர் சார்பில் வழக்குப்பதிவு மட்டும் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை இன்றும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்தகிரி கிராம மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கடத்தூர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவல் துறையினர் சார்பில் எந்தவிதமான தெளிவான பதிலும் வரவில்லை. 

இதனையடுத்து அஸ்தகிரி கிராம மக்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர், முனியப்பனின் உறவினர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். முனியப்பனின் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காரை இயக்கி வந்தவர் விவேகாந்தன் என்றும், காரில் அவரது நண்பர்கள் ரகுபதி, விஜி, முருகன் இருந்துள்ளார்கள் என்றும், முன்விரோதத்தால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Sugarcane Sales Farmer Muniyappan Murder by 4 Man Gang due to Antagonism


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->