என் மகனின் உடலை வாங்கவே மாட்டேன்; நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட ஆதித்யாவின் பெற்றோர்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வரும் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது மகள் ஜோதி துர்கா (வயது 19). நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா நீட் தேர்வு அச்சத்தால் வீடியோ வெளியிட்டு நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதையடுத்து, நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து  நீட் தேர்வு அச்சத்தால் 3 வதாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று ஒரேநாளில் மதுரை, தருமபுரி, நாமக்கல் என அடுத்தடுத்து 3 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட தருமபுரி மாணவர் ஆதித்யாவின் உடலை வாங்க மறுத்து அவரது  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தனது மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எங்களிடம் அனுமதி வாங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharmapuri student vignesh parents protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->