பாமக தலைவர் ஜி.கே. மணிக்கு புகழாரம்.. பென்னாகரம் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு.! - Seithipunal
Seithipunal


அடிப்படை தேவைகள் தான் தொகுதிக்கு முதல் முக்கியத்துவம். அதனை ஜி.கே மணி நிறைவேற்றியுள்ளார். அவருக்கு மாம்பழ சின்னத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரி பென்னாகரம் தொகுதி வேட்பாளர் பாமக தலைவர் ஜி.கே. மணியை ஆதரித்து பெண்ணகரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் பேசுகையில், " பென்னாகரம் தொகுதியில் குடிநீர் பிரச்சனைகள் உள்ள இடங்களில் குடிநீர் தொட்டியை கட்டிக்கொடுத்து, பள்ளிகளை கட்டிக்கொடுத்து, பேருந்து வசதியை ஏற்படுத்திக்கொடுத்தவர் திரு.ஜி.கே மணி. 

அடிப்படை தேவைகள் தான் தொகுதிக்கு முதல் முக்கியத்துவம். அதனை ஜி.கே மணி நிறைவேற்றியுள்ளார். திரு. ஜி.கே மணி பென்னாகரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள். அமோக வெற்றிபெற வையுங்கள்.கடந்த 2011 ஆம் வருட தேர்தல் வாக்குறுதியை மாறிந்த முதல்வர் ஜெயலலிதா குடும்ப அட்டைக்கு மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் வழங்கப்படும் என அறிவித்தார். அதனைப்போன்று, தற்போது அதிமுக அளித்துள்ள வாக்குறுதியையும் எனது தலைமையிலான அதிமுக அரசு நிறைவேற்றும். 

ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு நிலம் கொடுக்கப்படும் என முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதிதி தெரிவித்தார். ஆனால், ஆட்சியை அமைத்ததும் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார். திமுக என்பது ஒரு குடும்ப கட்சி. அவர்களின் குடும்பத்தை காப்பாற்றவும், அதனை வளர்க்கவும் நடத்தப்படும் குடும்ப கம்பெனி தான் திமுக. அவர்கள் இலாபத்தில் மட்டுமே குறியாக இருப்பார்கள். 

திமுக குடும்பத்திற்கு கொள்ளையடிக்க, பணம் சேர்க்க மட்டுமே கட்சி நடத்தி வருகிறார்கள். அவர்களின் குடும்பத்தை தவிர பிறர் ச.ம.உ மற்றும் நா.உவாக வர முடியுமா?. அண்ணன் ஜி.கே மணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக வர முடியும். அதிமுக கட்சியில் என்னைப்போன்று முதல்வராக வர வேண்டும். நாங்கள் விவசாயிகள். எங்களின் கூட்டணி விவசாய கூட்டணி. 

விவசாயி, விவசாய தொழிலாளி இருவரும் நாட்டிற்கு உணவளிப்பவர்கள். நமது கண்கள் போன்றது அதிமுகவும் - பாமகவும். மு.க ஸ்டாலின் அதிமுக, பாமக குறித்து விமர்சனம் செய்து வருகிறார். மு.க ஸ்டாலினுக்கு தகுந்த பாடம் இந்த தேர்தலில் புகட்டப்பட வேண்டும். கல்வி, மருத்துவ வசதி, தடையில்லா மின்சாரம், அடிப்படை வசதி போன்றவற்றை அண்ணன் ஜி.கே. மணி நிறைவேற்றியுள்ளார். அவர்தான் தொகுதிக்கான மண்ணின் மைந்தன். 

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பல நல்ல திட்டங்கள் அதிமுக அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதி கிராமப்புறங்கள் நிறைந்த தொகுதி. கிராமப்புற மாணவ செல்வங்கள் நீட் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றியடைய முடியவில்லை. கிராமப்புற மாணவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையால் பல வேலைகள் விவசாயம் சார்ந்து இருக்கும். 

நானும் சிறுபிள்ளையாக இருக்கையில் பல விவசாய பணிகளை பெற்றோருடன் செய்திருக்கிறேன். இவ்வாறான கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இயலாமல் கஷ்டப்பட்டனர். அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களை மருத்துவத்துறையில் படிக்க வைக்கவேண்டும் என்று மனதில் பட்ட எண்ணத்தை நிறைவேற்றி 7.5 உள் ஒதுக்கீடு வழங்கினேன். அதிமுக கூட்டணியின் திட்டம் ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும். சமுகத்தில் சிறந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்பது தான். ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். அண்ணன் ஜி.கே மணி பென்னாகரம் தொகுதியில் அமோக வெற்றியடைய உங்களின் வாக்குகளை மாம்பழம் சின்னத்தில் செலுத்த வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri PMK Pennagaram Candidate GK Mani and TN CM Edappadi Palanisamy Election Campaign 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->